அவ்ளோ சீன் எல்லாம் வேணாம்… இத மட்டும் செஞ்சாலே நியூசிலாந்த அசால்டாக ஜெயிச்சிடலாம்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சேன் வாட்சன்
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணிக்கு தேவையான அட்வைஸை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேன் வாட்சன் வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருப்பதே கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக உள்ளது.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேட் வாட்சன், இந்திய அணிக்கு தேவையான தனது அட்வைஸையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து சேன் வாட்சன் பேசுகையில், “இந்திய அணி கடந்த போட்டிகளை எதிர்கொண்டதை போலவே நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியையும் எதிர்கொள்ள வேண்டும். அரையிறுதி போட்டிக்காக புதிதாக எதையும் முயற்சிக்க தேவை இல்லை, இதுவரை செய்ததையே அரையிறுதி போட்டியிலும் செய்தால் போதும். இது நாக் அவுட் மேட்ச், உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டி என்ற அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் இந்திய வீரர்கள் அரையிறுதி போட்டியை எதிர்கொள்ள வேண்டும். அழுத்தம் இல்லாமல் விளையாடினாலே போதும். இந்திய அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. இந்திய அணியில் பலவீனங்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

அரையிறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து மற்றொரு முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் பேசுகையில், “இந்திய வீரர்கள் தற்போது மிக சிறந்த பார்மில் உள்ளனர். தற்போதைய இந்திய அணியை வீழ்த்துவது கடினமானது. கடந்த 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியதை போன்று இந்திய அணி தற்போது விளையாடி தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது. அரையிறுதி போட்டி கடினமானது என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் வலுவான அணியாக உள்ளது. எனவே நியூசிலாந்து அணியுடனான பழைய வரலாறுகளே தற்போதும் தொடரும் என்று கூற முடியாது. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்தார்.