இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ளது. அதன்பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வழக்கமான வீரர்கள் அனைவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், பிரசீத் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம், இந்திய டி.20 போட்டியில் இடம்பிடித்த அர்ஸ்தீப் சிங்கிற்கு, தற்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், பிரசீத் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங்.