டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார் தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கராச்சி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்து வீசியது. இதில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ரபாடா. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகள் என்கிற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை படைத்த எட்டாவது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இது மட்டுமில்லாது உலக அளவில் மிகக் குறைந்த பந்துகளில் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.
டெஸ்ட் அரங்கில் அதிவிரைவாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:
வக்கார் யூனிஸ் – 7730 பந்துகள்
டேல் ஸ்டெயின் – 7848 பந்துகள்
ரபாடா – 8154 பந்துகள்
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் அடித்திருந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாலோ-ஆன் படி, மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்துள்ளது. மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 29 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இதே நிலை நீடித்தால் ஆட்டம் பாகிஸ்தான் வசம் சென்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் என மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
பல ஆண்டுகளாக வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த நிலை மாறி இருப்பது கிரிக்கெட் உலகிற்கு ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறது. இருப்பினும் உயிரிய பாதுகாப்பு வசதிகள் உடனேயே இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.