ஓவர் சேட்டை செய்த வீரருக்கு தடை; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு !! 1

ஓவர் சேட்டை செய்த வீரருக்கு தடை; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ரபாடாவுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன.

இந்நிலையில், மூன்றாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களுக்கு மேல் அடித்து ஆடிவருகிறது. முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஓவர் சேட்டை செய்த வீரருக்கு தடை; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு !! 2

முதல் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டை 27 ரன்களில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார் ரபாடா. ரூட்டை வீழ்த்திவிட்டு அவருக்கு முன்பாக சென்று, கூச்சலிட்டு விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடினார் ரபாடா. ரூட்டுக்கு முன் சென்று வேண்டுமென்றே அவரை வம்பிழுக்கும் விதமாக அதிகப்பிரசங்கித்தனமாக கொண்டாடினார் ரபாடா.

ரபாடாவின் விதிமீறிய கொண்டாட்டத்தால், அவருக்கு போட்டி ஊதியத்தில் 15% அபராதமும் ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. ஓராண்டிற்குள்ளாக ரபாடா பெறும் 4வது டீமெரிட் புள்ளி இது என்பதால், அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த டெஸ்ட்டில் அவர் ஆடமாட்டார்.

https://twitter.com/PRINCE3758458/status/1218114868135378945

ஏற்கனவே டிவில்லியர்ஸ், ஆம்லா, மோர்னே மோர்கல், ஸ்டெய்ன் ஆகிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விலகியதால், படுமோசமாக சொதப்பி திணறிவந்த தென்னாப்பிரிக்க அணி, இப்போதுதான் அணியை கட்டமைத்து ஒருசில வெற்றிகளை பெற்றுவருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் வெல்லும் முனைப்பில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு, முக்கியமான கடைசி போட்டியில் ரபாடா ஆடாதது பெரிய இழப்பு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *