ஹர்பஜன் சிங்கின் பல வருட சாதனையை முறியடித்த தென்னாபிரிக்கா இளம் பந்துவீச்சாளர் ரபாடா!! 1
(Photo Source: Getty Images)

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற ஹர்பஜன் சிங்கின் பல வருட சாதனையை முறியடித்தார் தென்னாபிரிக்கா அணியின் இளம் பந்துவீச்சாளர் ரபாடா.

ஹர்பஜன் சிங்கின் சாதனை 

கங்குலி கேப்டன் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானாக திகழ்ந்த அணில் கும்ப்ளெவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தவர் சக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த ஹர்பஜன் 1998ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடினார்.

ஹர்பஜன் சிங்கின் பல வருட சாதனையை முறியடித்த தென்னாபிரிக்கா இளம் பந்துவீச்சாளர் ரபாடா!! 2
(Photo Source: Getty Images)

2003ம் ஆண்டு தனக்கு 23 வயது 106 நாட்கள் இருக்கையில், டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டெஸ்ட் அரங்கில் மிக குறைந்த வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியவர் என்ற கபில் தேவ் அன்றைய சாதனையை முறியடித்தார். கபில் தேவ் இந்த சாதனையை 23 வயது 155 நாட்கள் இருக்கையில் நிகழ்த்தியிருந்தார்.

இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள் பாடியுள்ள ஹர்பஜன் 417 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், பெட்டிங்கிலும் 2,224 ரன்கள் எடுத்துள்ளார். 84/8 வீழ்த்தியதே இதுவரை இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. 2008 ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடியதே இவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற கடைசி போட்டியாகும். அதன்பிறகு அணியில் இடம்பெற கடுமையாக போராடியும் எந்த பலனும் இல்லை.

மேலும், இதுவரை 236 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ள ஹர்பஜன் 269 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில், 1,237 ரன்கள் அடித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் 15 வருட சாதனை முறியடிப்பு 

தென்னாபிரிக்கா அணியின் இளம் பந்துவீச்சாளரான ரபாடா, இலங்கை அணிக்கெதிரான போட்டிக்கு முன்பு 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடிக்கலாம் என இருந்தது.

இலங்கை அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் 14 ஓவர்களுக்கு 50 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் இலங்கை அணி 287 ரங்களுக்கு ஆட்டமிழந்தது.

Cricket, Ranji Trophy, India, Yuvraj Singh, Harbhajan Singh
இரண்டாவது இன்னிங்சில் ரபாடா 12 ஓவர்களுக்கு 44 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3வது விக்கெட்டுகளில் வீழ்த்தியில் இவர் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

மேலும், 15 வருட ஹர்பஜன் சிங்கின் சாதனையையும் முறியடித்தார். இவர் 23 வயது 50 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை 31 போட்டிகள் மற்றும் 57 இன்னிங்சில் நிகழ்த்தியுள்ளார்.

மிக குறைந்த வயதில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியல்:
  1. காகிஸோ ரபாடா – 23 வயது 50 நாட்கள்
  2. ஹர்பஜன் சிங் – 23 வயது 106 நாட்கள்
  3. கபில் தேவ் – 23 வயது 155 நாட்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *