கமால் ரஷீத் கான், சுய பிரகடனம் செய்த திரைப்பட விமர்சகர், படங்களின் கருத்துகளை கூறுவதில் வல்லவர் என நினைத்து கொண்டிருக்கிறார்.
அவருடைய கருத்துக்கள் தலைப்புச் செய்திகளாக வரும். அவரின் தரப்பில், அவர் படங்களை பற்றி கருத்து கூறுகிறார். ஆனால், அவருடைய கருத்துக்கள் அனைத்தும் ஒன்றும் இல்லை.
மே 26-ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை பயண படம் வெளியாக உள்ளது. இங்கிலாந்திற்கு சென்ற இந்திய வீரர்கள் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அவருடைய படத்தை போட்டு காமித்தார் சச்சின் டெண்டுல்கர். அந்த படத்தை பார்த்து, அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அந்த படத்தையே பார்க்காத கமால் ரஷீத் கான், தன்னுடைய கருத்தை கூறினார். இந்த படம் சச்சினுக்கு கவர்ச்சியாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.
இந்த படம் நன்றாக இருக்காது என ரஷீத் கான் கூற, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் செம்ம ஹிட் ஆகப்போகுது என கூறுகிறார். சச்சினின் வாழ்க்கை வரலாறு படம், மே 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.