எல்லாரும் வெறித்தனமான பார்ம்ல இருக்காங்க... முன்ன மாதிரி இந்திய அணிய இப்ப அசால்டா அடிக்க முடியாது; பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் வீரர் !! 1
எல்லாரும் வெறித்தனமான பார்ம்ல இருக்காங்க… முன்ன மாதிரி இந்திய அணிய இப்ப அசால்டா அடிக்க முடியாது; பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் வீரர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தானிற்கு பெரும் சவாலாக இருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எல்லாரும் வெறித்தனமான பார்ம்ல இருக்காங்க... முன்ன மாதிரி இந்திய அணிய இப்ப அசால்டா அடிக்க முடியாது; பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் வீரர் !! 2

அக்டோபர் 8ம் தேதி நடைபெற இருக்கும் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி, 14ம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

மற்ற போட்டிகளை விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால், முன்னாள் வீரர்கள் பலர் தற்போதே இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

எல்லாரும் வெறித்தனமான பார்ம்ல இருக்காங்க... முன்ன மாதிரி இந்திய அணிய இப்ப அசால்டா அடிக்க முடியாது; பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மல், இந்திய அணியுடனான போட்டி பாகிஸ்தான் அணிக்கு சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கம்ரன் அக்மல் பேசுகையில், “சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க தேவை இல்லை என்ற அளவிற்கு இந்திய அணி பந்துவீச்சில் முழு பலம் கொண்ட அணியாக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் தங்களது பார்மிற்கு திரும்பியுள்ளனர். சுப்மன் கில்லும் மிக சிறப்பான பார்மில் உள்ளார். எனவே இந்திய அணி பேட்டிங்கிலும் வலுவான அணியாக உள்ளது. அக்டோபர் 14ம் தேதி நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு அதிக சவால் நிறைந்த போட்டியாக இருக்கும். இந்திய அணியை சமாளிக்க பாகிஸ்தான் அணி பல திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆசிய கோப்பை தொடரில் விளையாடியது போன்றே உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி விளையாடினால் பாகிஸ்தான் அணிக்கு மிக மோசமான தோல்விகளே கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *