வீடியோ; கைக்கு வந்த கேட்ச்சை கோட்டைவிட்ட அக்மல்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 1

வீடியோ; கைக்கு வந்த கேட்ச்சை கோட்டைவிட்ட அக்மல்; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காம்ரான் அக்மல் கோட்டை விட்ட கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீகில் மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங் புகார்கள் எழுவதும் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில், நடப்பு சீசனில் காம்ரான் அக்மலின் செயல்பாடு ரசிகர்களை சந்தேகத்திற்கு ஆளாக்கியுள்ளது. பெஷாவர் ஸால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அக்மல் ஒரு கேட்ச்சை விட்டார்.

அது வேண்டுமென்றே விடப்பட்டதாக ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி 15 ஓவரில் 170 ரன்கள் அடித்தது. 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 140 ரன்கள் மட்டுமே அடித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

வீடியோ; கைக்கு வந்த கேட்ச்சை கோட்டைவிட்ட அக்மல்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 2

171 ரன்கள் என்ற இலக்கை கிளாடியேட்டர்ஸ் அணி விரட்டும்போது, ஹசன் அலி வீசிய 14வது ஓவரின் மூன்றாவது பந்தை அடித்த தூக்கியடித்தார் சொஹைல் கான். ஆனால் ஷாட்டின் டைமிங் சரியில்லாததால் எட்ஜ் ஆகி அதிகமான உயரத்திற்கு சென்றது. அதை மிகச்சரியாக விரட்டிச்சென்ற காம்ரான் அக்மல், பிடித்திருக்க வேண்டிய கேட்ச்சை கோட்டைவிட்டார். அவர் விட்ட விதத்தை பார்த்தால் வேண்டுமென்றே விட்டதுபோலத்தான் இருந்தது. அதனால் தான் அவர் வேண்டுமென்றே விட்டிருப்பார் என்றும் அவர் மீது சந்தேகங்களையும் எழுப்பிவருகின்றனர்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *