"நாயகன் மீண்டும் வரான்".. உலகக்கோப்பைக்குள் வருவது தான் என்னுடைய நோக்கம்.. முன்னணி வீரர் வெறித்தனமான பேட்டி! 1

“உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.” என காயத்திற்கான அப்டேட் கொடுத்து பேட்டி அளித்துள்ளார் கேன் வில்லியம்சன்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டிருந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் லீக் போட்டியின்போது ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கையில் வலது காலில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

"நாயகன் மீண்டும் வரான்".. உலகக்கோப்பைக்குள் வருவது தான் என்னுடைய நோக்கம்.. முன்னணி வீரர் வெறித்தனமான பேட்டி! 2

உடனடியாக நாடு திரும்பிய அவருக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரம் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சையினால் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற முடியாமல் போய்விடுமோ? என்கிற அச்சமும் ஏற்பட்டது.

ஏனெனில் கடந்த 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு கேன் வில்லியம்சனின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். அப்படிப்பட்ட வீரர் இல்லை என்பது மிகப்பெரிய பின்னடைவை தரும் என்பதால் இந்த அச்சம் நிலவியது.

"நாயகன் மீண்டும் வரான்".. உலகக்கோப்பைக்குள் வருவது தான் என்னுடைய நோக்கம்.. முன்னணி வீரர் வெறித்தனமான பேட்டி! 3

அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளது. தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் கென் வில்லியம்சன், அவ்வப்போது மெதுவாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.  “மெல்ல மெல்ல காயத்திலிருந்து குணமடைய வேண்டும். உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும்.” என்று தனது சமீபத்திய பேட்டியில் விருப்பம் தெரிவித்துள்ளார். கேன் வில்லியம்சன் பேசியதாவது:

“எனது கிரிக்கெட் கேரியரில் இத்தனை நாட்கள் காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததில்லை. துவக்கத்தில் இது எனக்கு மனதளவில் சென்று பாதிப்பை கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு வாரமும் சிறுகசிறுக குணமடைந்து வரும் இந்த நாட்களை நான் சற்று புதுவிதமாக என்ஜாய் செய்கிறேன்.

"நாயகன் மீண்டும் வரான்".. உலகக்கோப்பைக்குள் வருவது தான் என்னுடைய நோக்கம்.. முன்னணி வீரர் வெறித்தனமான பேட்டி! 4

ஒருபோதும் இந்த அணுகுமுறையில் நான் வேகத்தை காட்டவில்லை. நிதானமாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும், அவசரம் கட்டபோவதில்லை.

எனக்கு ஏற்பட்ட காயத்தை போலவே காயமடைந்த வீரர்களிடமும் பேசினேன். அவர்களின் அனுபவத்தை பெற்றுக்கொண்டேன். சில நேரங்களில் கடினமாகவும் இருக்கிறது. எப்போது முழுமையாக குணமடையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

"நாயகன் மீண்டும் வரான்".. உலகக்கோப்பைக்குள் வருவது தான் என்னுடைய நோக்கம்.. முன்னணி வீரர் வெறித்தனமான பேட்டி! 5

உலகக்கோப்பை தொடருக்கு போதிய நாட்கள் இருப்பதாக நினைக்கிறேன். அதற்குள் குணமடைந்து . வலைப்பயிற்சியில் ஈடுபடுவேன். மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவேன் என நினைக்கிறேன். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று கேன் வில்லியம்சன் பகிர்ந்து கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *