சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் காயமடைந்த கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக விலகுகிறார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.
ஐபிஎல் தொடர் 31ஆம் தேதி துவங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி. டாஸ் வென்று குஜராத் அணிக்கு பந்துவீச்சை தேர்வு செய்தார் ஹர்திக் பாண்டியா.
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அபாரமாக விளையாடி வந்த ருத்துராஜ் கெய்க்வாட், போட்டியின் 13வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். அப்போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் பந்தை பிடித்து உள்ளே தூக்கி போட்டு பவுண்டரிக்கு வெளியே குதித்தார்.
மீண்டும் அதைப்பிடிக்க பந்தை முயற்சித்தபோது, வெளியே குதித்த கேன் வில்லியம்சன் காலில் காயம் ஏற்பட்டது. எழுந்து நிற்கக்கூட முடியாமல் அங்கேயே படுத்துவிட்டார். உள்ளே ஓடி வந்த அணியின் பிசியோ, இவரை பரிசோதித்த போது காலில் காயம் தீவிரமாக ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தது.
கேன் வில்லியம்சன் நடக்க முடியாததால், தோளில் தாங்கியபடி வெளியே அழைத்துச் சென்றனர். முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். வில்லியம்சன் காலில் ஸ்கேன் செய்யப்பட்டது. வெளிவந்த ஸ்கேன் முடிவுகளின்படி, கேன் வில்லியம்சன் காயம் குணமடைவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று உறுதியாகியது.
இதன் அடிப்படையில், இனி மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று தெரிய வந்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா என்பது சற்று வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால் மருத்துவ அறிக்கையின்படி, விளங்குவார் என்பது தெளிவாக தெரிகிறது.
கேன் வில்லியம்சன் காயம் அடைந்ததால் இம்பேக்ட் வீரர் முறைப்படி, தமிழக வீரர் சாய் சுதர்சன் உள்ளே கொண்டு வந்து நம்பர் 3 இடத்தில் விளையாட வைக்கப்பட்டார். கடந்த சீசனில் குஜராத் அணிக்கு தொடர்ந்து நம்பர் 3 இடத்தில் விளையாடி நன்றாக பங்களிப்பையும் கொடுத்தார். இந்த சீசன் கேன் வில்லியம்சன் வந்ததால், சாய் சுதசர்சன் பிளேயிங் லெவன் வாய்ப்பு பறிபோனது. தற்போது வில்லியம்சன் காயம் அடைந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழக ரசிகர்கள் மத்தியில் ஆறுதலாகவும் இருக்கிறது.