ஐபிஎல் தொடருக்காக நான் இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச தொடரை தவிர்க்க முடியாது என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.  

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.

ஐபிஎல் தொடருக்காக சர்வதேச தொடரை தவிர்க்க முடியாது !  ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் உறுதி ! 2

ஆனால் ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில்  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட இருக்கிறார்.

ஆனால்  நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் ஜூன் மாதத்தில் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தான் 14வது ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆப் போட்டிகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறிது கடினமாக இருக்கிறது.

ஐபிஎல் தொடருக்காக சர்வதேச தொடரை தவிர்க்க முடியாது !  ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் உறுதி ! 3

இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடருக்காக சர்வதேச தொடரை என்னால் தவிர்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர்  இன்னும் இரண்டு தொடர்களின் தேதிகளும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இது குறித்து பேசுவது அவசியமற்றது என்று கூறியிருக்கிறார் வில்லியம்சன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *