நியுசிலாந்தி அணிக்கு பெருத்த பின்னடைவு! டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இந்தியாவிற்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! 1

கேன் வில்லியம்சன் நடந்த ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. அவரது இடது கை முழங்கை காயமடைந்த காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. மீண்டும் காயம் சரியானவுடன் சில போட்டிகளில் விளையாடினார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் நன்றாக விளையாடி இருந்த நிலையில், தற்பொழுது நியூசிலாந்து நிர்வாகம் அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று கூறியிருக்கிறது.

நியுசிலாந்தி அணிக்கு பெருத்த பின்னடைவு! டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இந்தியாவிற்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! 2

மீண்டும் கேன் வில்லியம்சனுக்கு முழங்கை பிரச்சனை

முதல் டெஸ்ட் போட்டி நன்றாக விளையாடிய கேன் வில்லியம்சன், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் அவருக்கு இடது முழங்கையில் பிரச்சினை எழுந்துள்ளது. அதன் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட போவதில்லை என்கிற செய்து உறுதியாகியுள்ளது.

இன்னும் சரியாக பத்து நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கையில், அனாவசிய முடிவை எடுக்க நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை. எனவே அவருக்கு ஓய்வு அளிக்க நியூசிலாந்து நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை நடக்க இருக்கின்ற 2வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாட போவதில்லை என்கிற செய்து உறுதியாகியுள்ளது.

நியுசிலாந்தி அணிக்கு பெருத்த பின்னடைவு! டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இந்தியாவிற்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! 3

மீண்டும் களம் இறங்கப் போகும் டிரென்ட் போல்ட்

நியூசிலாந்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு செய்தியை நியூசிலாந்து நிர்வாகம் கூறியுள்ளது, டிரென்ட் போல்ட் நாளை நடக்க இருக்கின்ற 2வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவார் என்பதுதான் அந்த செய்தி. நாளை நடக்க இருக்கின்ற 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு அவருக்கு ஒரு நல்ல பயிற்சி ஆட்டம் ஆக இது அமையும்.

அதேசமயம் மிட்ச்சல் சான்ட்னர் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்தி அணிக்கு பெருத்த பின்னடைவு! டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இந்தியாவிற்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! 4
New Zealand’s Trent Boult (R) celebrates India’s captain Virat Kohli (L) being caught during day three of the first Test cricket match between New Zealand and India at the Basin Reserve in Wellington on February 23, 2020. (Photo by Marty MELVILLE / AFP)

வெற்றியை தீர்மானிக்கும் போகும் இரண்டாவது டெஸ்ட் போட்டி

முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டி நாளை நடக்க இருக்கிறது. நாளை நடக்க இருக்கின்ற போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணியே டெஸ்ட் தொடரை கைப்பற்றும். எனவே நாளை நடக்க இருக்கின்ற டெஸ்ட் போட்டி நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும். டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வண்ணம் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *