அதெல்லாம் நாங்க பாத்துப்போம்… ஸ்ட்வீ வாக்கிற்கு பதிலடி கொடுத்த கபில் தேவ் !! 1
அதெல்லாம் நாங்க பாத்துப்போம்… ஸ்ட்வீ வாக்கிற்கு பதிலடி கொடுத்த கபில் தேவ்

இந்திய கேப்டன் கோலயை விமர்சித்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கு, முன்னால் இந்திய கேப்டன் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற கோலி தலைமையிலான இளம் இந்திய அணி, சுமார் 25 ஆண்டுகால இந்தியர்களின் கனவை நினைவாக்கியது. தற்போது இந்திய அணி, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

அதெல்லாம் நாங்க பாத்துப்போம்… ஸ்ட்வீ வாக்கிற்கு பதிலடி கொடுத்த கபில் தேவ் !! 2

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்திய கேப்டன் கோலியின் கொண்டாட்டம் வானத்துக்கும் பூமிக்குமாக அளவுக்கு அதிகமாக இருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,’ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும். அதற்கு எல்லாத்துக்கும் பதில் அளிக்க முடியாது. பொதுவாகவே நம் நாடு மிகவும் சாந்தமான நாடு. ஆனால் கங்குலி, கோலி போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு. ஆனால் அணிக்கு வெற்றி கிடைக்கும் வரை இதைப்பற்றி எவ்வித பிரச்சனையும் இல்லை. கோலி 19வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்கும் போது இருந்தே அப்படி தான் செயல்படுகிறார்.’ என்றார்.

அதெல்லாம் நாங்க பாத்துப்போம்… ஸ்ட்வீ வாக்கிற்கு பதிலடி கொடுத்த கபில் தேவ் !! 3

ஸ்டீவ் பேசியது என்ன..? 

தென்ஆப்பிரிக்கா தொடரின்போது நான் விராட் கோலியை பார்த்தேன். அவரது ஆக்ரோஷம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக உணர்கிறேன். ஆனால், கேப்டன் பதவியில் கற்றுக் கொண்டுள்ளார். தன்னை ஒரு கேப்டனாக இன்னும் மேம்படுத்திக் கொண்டு வருகிறார். சில நேரங்களில் சந்தோசமான காரணிகள், எமோசன் அவரை இழுக்கிறது. இருந்தாலும், அவர் வழியில் அவர் விளையாடுகிறார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, ஸ்மித்தை விட கோஹ்லி அதிக ஆக்ரோஷமாக செயல்படுகிறார், என்று பேசியிருந்தா. இதற்கு தான் கபில் தேவ் தற்போது தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *