உலகக்கோப்பையில் இவர் தான் மாஸ் காட்டுவார்; கபில் தேவ் ஓபன் டாக் !! 1

உலகக்கோப்பையில் இவர் தான் மாஸ் காட்டுவார்; கபில் தேவ் ஓபன் டாக்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கிய பங்காற்றுவார் என முன்னாள் வீரர் கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகிதாச்சாரத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த வகையில் மற்ற அணிகளை விட இந்திய அணி அதிக அனுபவம் கொண்டதாகும். வீரர்கள் கலவை சரிசமமான விகிதத்தில் உள்ளது. 4 வேகப்பந்து வீச்சாளர்களும், 3 சுழற்பந்து வீச்சாளர்களும், விராட்கோலி, டோனி ஆகியோரும் அணி யில் அங்கம் வகிக்கிறார்கள்.

உலகக்கோப்பையில் இவர் தான் மாஸ் காட்டுவார்; கபில் தேவ் ஓபன் டாக் !! 2

டோனியும், விராட்கோலியும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். 4 வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல நிலையில் உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளங்கள் அவர்கள் பந்தை ஸ்விங் செய்ய உதவிகரமாக இருக்கும். முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறார்கள்.

இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்தியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி உறுதியாக அரைஇறுதிக்கு முன்னேறும். அதன் பிறகு போட்டி நிச்சயம் கடினமாக இருக்கும். அரைஇறுதிக்கு பிறகு முன்னேறுவதில் அதிர்ஷ்டமும், தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணியின் கூட்டு முயற்சியும் அவசியமானதாகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மற்ற அணிகளை விட வலுவானதாகும். நியூசிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவையாகும்.

உலகக்கோப்பையில் இவர் தான் மாஸ் காட்டுவார்; கபில் தேவ் ஓபன் டாக் !! 3

கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமின்றி யாரும் 4-வது வீரராக களம் இறங்கி விளையாட முடியும். ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட விட வேண்டும். நான் எந்தவொரு வீரரையும், மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பமாட்டேன். ஏனெனில் அது அந்த வீரருக்கு நெருக்கடியை அளிக்கும். என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *