இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்க களமிறங்கும் இரண்டு சீனியர் வீரர்கள் !! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இணைந்த கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் நவதீப் சைனி.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை மிகவும் எளிதாக வீழ்த்தி தனது வெற்றி கணக்கை 1-0 என துவங்கியுள்ளது.

விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி துவங்குவதற்கு முன்பே இந்திய அணியில் தேர்வான தவான்,ருத்ராஜ், ஷ்ரேயாஸ் போன்ற வீரர்கள் கொரோனா தொற்று காரணமாகவும், கேஎல் ராகுல் தனது சொந்த காரணத்தினாலும் விளையாடவில்லை.

இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்க களமிறங்கும் இரண்டு சீனியர் வீரர்கள் !! 2

இதன் காரணமாக இந்திய அணி விண்டீஸ் அணிக்கு எதிராக கொஞ்சம் கஷ்டப்பட வேண்டிய நிலை உருவாகும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்த நிலையில் இந்திய அணி விண்டீஸ் அணியை அடித்து துவம்சம் செய்து வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கே எல் ராகுல் நவ்தீப் சைனி மற்றும் மாயக் அகர்வால் போன்ற 3 வீரர்களும் அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கி விட்டனர் என்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

https://twitter.com/BCCI/status/1490676156898574337?s=20&t=QYiDIM42WoAIZn5mN0_6_g

இதில் நவ்தீப் சைனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டி துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். தற்பொழுது பரிபூரண குணம் அடைந்த நவ்தீப் சைனி தனிமைப்படுத்தப்பட்ட பின் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

அதேபோன்று, ஷிகர் தவான் ருத்ராஜ் போன்ற வீரர்கள் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு பதில் பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட்ட மயங்க் அகர்வால் தனிமைப்படுத்தப்பட்ட பின் இந்திய அணியில் இணைந்துள்ளார். இவர்களை அடுத்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் கே எல் ராகுல் தனது சொந்த காரணத்திற்காக ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் அணியில் இணைந்துள்ளார், தற்பொழுது இவர்கள் மூவரும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *