கோஹ்லி கிடையாது... இவர் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்; கருண் நாயர் சொல்கிறார் !! 1

கோஹ்லி கிடையாது… இவர் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்; கருண் நாயர் சொல்கிறார்

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என இந்திய அணியின் இளம் வீரர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக இந்தியாவின் கோஹ்லி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர்.

கோஹ்லி கிடையாது... இவர் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்; கருண் நாயர் சொல்கிறார் !! 2

ஜோ ரூட், பாபர் அசாம் போன்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், கோஹ்லி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதமே அதிகமாக நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் வீரர்களுடனான உரையாடல் என்றால் உங்களது பார்வையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் கேள்வி எழாமல் இருக்காது, அதில் பெரும்பாலான வீரர்களின் பதில் விராட் கோஹ்லி அல்லது ஸ்டீவ் ஸ்மித்தாக தான இருக்கும்.

இந்தநிலையில், இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான கருண் நாயர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஸ்டீவ் ஸ்மித் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ளார்.

கோஹ்லி கிடையாது... இவர் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்; கருண் நாயர் சொல்கிறார் !! 3

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னை பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ளார். அதே போல் உலகின் நான்கு சிறந்த வீரர்களான கோஹ்லி, ஸ்டீஸ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட்டிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமும் பேட்டிங்கில் தலைசிறந்து விளங்குவதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

கோஹ்லி கிடையாது... இவர் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்; கருண் நாயர் சொல்கிறார் !! 4

ஐ.பி.எல் தொடரில் கருண் நாயர் விளையாடும் பஞ்சாப் அணியை தவிர்த்து, வேறு இரண்டு பலம் வாய்ந்த அணிகள் குறித்தான கேள்விக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டெல்லி கேப்பிடல்ஸ் என கருண் நாயர் பதிலளித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *