கேதர் ஜாதவிற்கு வலது தொடையில் மீண்டும் காயம்!! 1

நேற்றைய போட்டியில் பேட்டிங் பிடித்துக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே வெளியேறிய கேதர் ஜாதவிற்கு மீண்டும் அவரது வலது தொடையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேச அணியை கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியஅணி 7-ஆவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நிறைவாக இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடப்பு சாம்பியன் இந்திய அணி சூப்பர் ஃபோர் பிரிவில் 2 வெற்றி, 1 டிராவுடன் இறுதிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் வங்கதேசம் 2 வெற்றி, 1 தோல்வியுடன் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வங்கதேசமும் களமிறங்கின.
தொடக்கம் முதலே லிட்டன் தாஸ் ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டார். அவருக்கு மெஹிதி துணை நின்றார். இந்திய பந்துவீச்சை லிட்டன் தாஸ் பதம் பார்த்த நிலையில் 21-ஆவது ஓவரில் வங்கதேசம் 120 ரன்களை கடந்தது. அப்போது 32 ரன்கள் எடுத்திருந்த மெஹிதி ஆட்டமிழந்தார். பின்னர் இம்ருல் கைய்ஸ்-லிட்டன் இணை சேர்ந்தது.கேதர் ஜாதவிற்கு வலது தொடையில் மீண்டும் காயம்!! 2
லிட்டன் அபார சதம்: ஆனால் லிட்டன் தாஸ் ஒருபுறம் நின்று ஆடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. இம்ரூல் கைய்ஸ் 2, முஷ்பிகுர் ரஹ்மான் 5, மொஹமது மிதுன் 2, மமுதுல்லா 4 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
செüம்யா சர்கார் 33, மொர்டஸா, நஸ்முல் இஸ்லாம் தலா 7 ரன்களுடனும், ருபேல் உசேன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
குல்தீப் யாதவ் 3/45: இந்திய தரப்பில் குல்தீப் யாதவ்
அபாரமாக பந்துவீசி3-45 விக்கெட்டை வீழ்த்தினார். கேதர் ஜாதவ் 2-41, பும்ரா, சஹால் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களுடன் இருந்த வங்கதேசம்,
31 ரன்களுக்கு 5 விக்கெட்டை
இழந்து விட்டது. மூன்று முக்கிய ரன் அவுட்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்த
6 விக்கெட்டுகள், மிடில் ஆர்டர்
நிலைகுலைந்தது ஆகியன வங்கதேச சரிவுக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா வெற்றி: 223 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி சார்பில் ஷிகர் தவன்-ரோஹித் சர்மா களமிறங்கினர்.
, ருபேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக்-தோனி ஆகியோர் ஸ்கோர் எண்ணிக்கை உயர்த்தினர். தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 61 பந்துகளில் 37 ரன்களை எடுத்த தினேஷ் கார்த்திக், மமுதுல்லா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அப்போது 30.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களையே இந்தியா எடுத்திருந்தது.
. இதற்கிடையே ஒரளவு ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா 23 ரன்களுக்கும், புவனேஸ்வர்குமார் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. மீண்டும் ஜாதவ் திரும்பி வந்த நிலையில் ஒரளவு நம்பிக்கை ஏற்பட்டது.
இறுதியில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கேதர் ஜாதவிற்கு வலது தொடையில் மீண்டும் காயம்!! 3
50-ஆவது ஓவரின் கடைசி பந்தில் இந்திய வெற்றி இலக்கை எட்டியது. கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜாதவ் 23, குல்தீப் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச தரப்பில் முஸ்தபிஸþர் ரஹ்மான், ருபேல் உசேன் தலா 2 விக்கெட்டையும், நஸ்முல், மொர்டஸா, மமுத்துல்லா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *