ஒரு காலத்தில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனை பார்த்தால் அனைத்து நாட்டின் பந்துவீச்சாளர்களும் அஞ்சுவார்கள். இங்கிலாந்துக்காக 9 வருடம் விளையாடி 104 டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் கெவின் பீட்டர்சன். சில வருடங்களில் இவரை போல சாதனை படைத்தவர்கள் சில வீரர்கள் தான்.
வித்தியாசமான கிரிக்கெட் ஷாட்கள் அவர் விளையாடுவதால் அவரின் புகழ் வானத்தை தொட்டது. அவர் சுத்தி சுத்தி விதவிதமான ஷாட்கள் அடிப்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவர் கடைசியாக 2013/14 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் அடித்தார் பீட்டர்சன். ஆனால், அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரை தூக்கி வெளியே வீசினார்கள்.
“என் பயணம் முடிவடைவது என வருத்தம் அளிக்கிறது. கடந்த ஒன்பது வருடங்களில் நாங்கள் அடைந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்,” என கெவின் பீட்டர்சன் கூறினார்.
ஆனால், இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார், மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன். அதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் டி20 லீக் தொடர்களிலும் அவர் பங்கேற்கிறார். ஐபில், சிபிஎல், பிபிஎல், பிஎஸ்ல், நாட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் என அனைத்து லீக் தொடர்களில் அவர் விளையாடி வருகிறார்.
தற்போது நாட் வெஸ்ட் டி20 தொடரில் விளையாடி வரும் பீட்டர்சன், நேற்று இரவு இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது முடிந்துவிட்டது என வருந்தி கூறினார்,
அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு உள்ளது. அவர் தென்னாபிரிக்காவில் பிறந்ததால் , அடுத்த வருடத்தில் இருந்து தென்னாபிரிக்கா அணிக்காக அவரால் விளையாட முடியும்.