இந்தியில் ட்வீட் போட்டு இந்திய ரசிகர்களின் மனதை வென்ற கெவின் பீட்டர்சன் !! 1

இந்தியில் ட்வீட் போட்டு இந்திய ரசிகர்களின் மனதை வென்ற கெவின் பீட்டர்சன்

கொரோனா விழிப்புணர்வு செய்தி பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் ‘இந்தி’யில் டுவிட் செய்துள்ளார் கெவின் பீட்டர்சன்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்தியில் ட்வீட் போட்டு இந்திய ரசிகர்களின் மனதை வென்ற கெவின் பீட்டர்சன் !! 2
BRISBANE, AUSTRALIA – NOVEMBER 26 : Kevin Pietersen looks on during the fourth day of the first Ashes cricket test match between Australia and England at the Gabba on November 26, 2017 in Brisbane, Australia. (Photo by Philip Brown/Getty Images) *** Local Caption *** Kevin Pietersen

பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முயன்ற அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராகவும் உள்ள கெவின் பீட்டர்சனுக்கு எப்போதுமே இந்தியா மீது அக்கறை உண்டு.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மக்களுக்கு கெவின் பீட்டர்சன் கொரோனா குறித்த விழிப்புணர்வு கருத்தை வெளிப்படுத்த விரும்பினார். ஆங்கிலத்தில் பதிவிட்டால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரசிகர்களுக்கு படிக்க கஷ்டாக இருக்கும் நினைத்த அவர், இந்தி ஆசிரியரை வைத்து இந்தியில் தனது கருத்து பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *