இந்தக் காரணத்தினால் விராட் கோலி மீது அதிக கோபத்தில் இருந்தேன்; சுவாரஸ்யமான சம்பவத்தை வெளியிட்டு கெவின் பீட்டர்சன் !! 1

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன், ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் ஐபிஎல் தொடரில் 7 சீசன்களில் பங்கேற்று 36 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்தக் காரணத்தினால் விராட் கோலி மீது அதிக கோபத்தில் இருந்தேன்; சுவாரஸ்யமான சம்பவத்தை வெளியிட்டு கெவின் பீட்டர்சன் !! 2

டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(2009,2010) போன்ற அணிகள் பங்கேற்று விளையாடிய கெவின் பீட்டர்சன், பெங்களூர் அணியில் விளையாடும் பொழுது விராட் கோலியுடன் ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதுகுறித்து கெவின் பீட்டர்சன் பேசுகையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தேன், அப்பொழுது விராட் கோலி செய்த தவறால், நான் ரன்-அவுட் செய்யப்பட்டு எனது விக்கெட்டை இழந்து விட்டேன், அப்பொழுது விராட் கோலி மீது கடுமையாக கோபம் அடைந்தேன். ஆனால் விராட் கோலி அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப் படவில்லை. விராட் கோலி, நான் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிவன், அதிக அனுபவங்களைக் கொண்டவன் என்றெல்லாம் கொஞ்சம் கூட பார்க்கவில்லை. தன்னுடைய விக்கெட் விழுந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தார். அதேபோன்று அந்த இளம் வீரர் சிறப்பாகவும் செயல்பட்டார். மேலும் விராட் கோலிக்கும் எனக்கும் அதிகப்படியான நட்பு இருந்தது அவருடைய ஆரம்பகால கட்டத்தில் அவருடைய கிரிகெட் கரியர் வளர்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன் என்று கெவின் பீட்டர்சன் அதில் பேசியிருந்தார்.

இந்தக் காரணத்தினால் விராட் கோலி மீது அதிக கோபத்தில் இருந்தேன்; சுவாரஸ்யமான சம்பவத்தை வெளியிட்டு கெவின் பீட்டர்சன் !! 3

மேலும் பேசிய கெவின் பீட்டர்சன், விராட் கோலியுடன் நான் பஸ்ஸில் ஒன்றாக அமர்ந்து உள்ளேன், அவருடன் ஒன்றாக விளையாடி உள்ளேன் அவர் ஒரு சிறந்த வீரராக வருவார் என்பதை அப்பொழுதே அவர் விளையாடிய விதம் மற்றும் அவர் கத்துக்கொண்ட விதம் வைத்து முடிவு செய்தேன். நான் ஆரம்பத்தில் விராட் கோலியை பார்க்கையில், அவர் கொழுத்த சின்ன பையனாக இருந்தார் தற்போது விராட் கோலி எட்டியுள்ள உயரம் அபரிவிதமானது என்று கெவின் பீட்டர்சன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *