ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு !! 1

ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு

ஐபிஎல் போட்டி குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், கண்டிப்பாக நடைபெறும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில் வருகிற 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 14-ந்தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அத்துடன் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்றால் மேற்கொண்டு தொடரை நடத்துவது குறித்து யோசிக்கலாம் என்ற எண்ணத்தில் பிசிசிஐ இருக்கிறது.

ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு !! 2
Photo by: Prashant Bhoot /SPORTZPICS for BCCI

ஆனால் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கினால் இது ஐபிஎல் தொடரில் இருந்துதான் ஆரம்பிக்கப்படும் என சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன் என்ற கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘ஜூலை-ஆகஸ்டில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம். ஐபிஎல் கட்டாயம் நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன். ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்படலாம்.

ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு !! 3

ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்க நேரிடும். இதை சற்று சமாளிக்கும் வகையில் ரசிகர்கள் யாரையும் அனுமதிக்காமல் பூட்டிய மைதானத்திற்குள் மூன்று அல்லது நான்கு வாரங்களில் போட்டிகளை நடத்திட முடியும்.’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *