முக்கிய ஆல்ரவுண்டருக்கு கொரோனா ! ரத்து செய்யப்படும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் !
இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறது. ஜனவரி மாதம் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜனவரி 14ஆம் தேதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்காக 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்தடைந்தது. கொரோனா வைரஸ் காலத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட திட்டமிட்டிருந்தது டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை சமன் செய்யும் விதமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெல்வதற்காக இலங்கைக்கு வந்து இருக்கிறது இங்கிலாந்து.

இந்நிலையில் தற்போதும் இங்கிலாந்து அணி இந்த கொரோனா வைரஸ் விட்டுவிடவில்லை இலங்கைக்கு வந்து சேர்ந்தவுடன் அனைத்து இங்கிலாந்து வீரர்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்த பத்து நாட்கள் தனிமையில் ஒரு சில சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயின் அலி வைரஸ் மூலம் தாக்கப்பட்டிருக்கிறார். மொயீன் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இலங்கை அரசு விதிகளின்படி அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

அவருடன் நேரடித் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படும் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதேபோல், எஞ்சிய இங்கிலாந்து அணியினரும் பரிசோதிக்கப்படவுள்ளனா்.
முன்னதாக, இங்கிலாந்தில் இருந்து புறப்படும்போது மொயீன் அலிக்கு கொரோனா பாதிப்பு இல்லாதிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.