அணி தேர்வு செய்வதை பற்றி பேசினார் விராட் கோலி

கடந்த வருடத்தில் இருந்து தொடர்ந்து விளையாடும் முக்கிய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார். அடுத்த வருடத்தில் சில முக்கியமான மற்றும் பெரிய அணிகளுடன் விளையாடுவதால், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இந்திய அணியை வலுப்படுத்தவேண்டும்.

தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. நியூஸிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் வந்து முழு தொடர் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாட இலங்கை அணி வருகிறது.

இந்த இரண்டு தொடர்கள் முடிந்த பிறகு, நேரடியாக தென்னாப்ரிக்காவுக்கு செல்ல உள்ளது இந்திய அணி. தென்னாப்ரிக்காவுக்கு சென்று இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன் பிறகு ஜூலை -யில் இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஓய்வு என்றால் பேட்ஸ்மேனுக்கு மட்டும் அல்ல பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விராட் கோலி தெரிவித்தார்.

“அனைவருக்கும் ஓய்வு தேவை, முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு. அதனால் தான் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஓய்வில் இருக்கிறார்கள். டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இதை பற்றி ஏற்கனவே பேசிவிட்டோம்,” என விராட் கோலி கூறினார்.

“இனி முக்கியமான தொடர்கள் வரவுள்ளதால், முக்கிய வீரர்களுக்கு அடுத்து வரும் சில வாரங்களில் கண்டிப்பாக ஓய்வு தேவை. இதை எப்படி செய்வதென்று முடிவெடுக்க வேண்டும்,” என விராட் கோலி மேலும் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.