சின்ன பசங்கள அடிச்சு சீன் போட்டானுக,ஆனால் உண்மையான வீரர்களை கண்டதும் பேச்சுமூச்சே காணோம் ; இந்திய அணியை வச்சு செய்த சுனில் கவாஸ்கர்..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு உண்மையான காரணமே இதுதான் என இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மிக இலகுவாக கைப்பற்றிய இந்திய அணியால், டி.20 தொடரில் விண்டீஸ் அணியை இந்திய அணியால் இலகுவாக சமாளிக்கவே முடியாவில்லை.
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் மோசமான தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது டி.20 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஐந்தாவது டி.20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து, டி.20 தொடரையும் இழந்தது.
விண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தோல்வி குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தோல்விக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில்., “இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் பிரான்சைஸ் லெவலில் சிறப்பாக செயல்படுகிறார்கள் ஆனால் தனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்றால் எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. பிரான்சைஸ் லெவலில் சிறப்பாக செயல்பட்ட சில நட்சத்திர வீரர்களாலும் தனது நாட்டிற்காக சிறப்பாக செயல்பட முடியவில்லை. 19 வயதுக்குட்பட்ட தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இன்னும் விண்டிஸ் அணிக்கு எதிரான டி.20தொடரை பார்க்கும் பொழுது சிறுவர்களுக்கும் மற்றும் பருவம் அடைந்த ஆண்களுக்கும் நடைபெறும் போட்டி போல இருந்தது.
இந்திய அணியில் இருந்த வீரர்கள் தங்களுக்கு நிகரான வீரர்களுக்கு எதிராக மோதும் போது சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் அவர்கள் உண்மையான வீரர்களை கண்டதும் சற்று தடுமாறி விட்டனர். 19 வயதிற்கு உட்பட்ட போட்டிகளை வெற்றி கண்ட நம்முடைய வீரர்கள் சர்வதேச அளவில் விளையாடும் பொழுது எளிதாக இருக்கும் என்று கருதினார். ஆனால் அவர்களுக்கு நல்ல பாடம் அமைந்துவிட்டது, என்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.