கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் பொலார்டு; முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை !! 1

கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் பொலார்டு; முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பொல்லார்ட்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் பொலார்டு; முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை !! 2

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் 20 ஓவர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 500-வது ஆட்டத்தில் விளையாடி சாதனை படைத்தார். உள்ளூர், லீக் மற்றும் சர்வதேசம் உள்பட அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளிலும் 500 ஆட்டத்தில் விளையாடிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் பொல்லார்ட் 15 பந்தில் 34 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். 500 ஆட்டத்தில் 450 இன்னிங்சில் விளையாடி 10 ஆயிரம் ரன் குவித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் எடுத்துள்ளார். ஒரு சதம், 49 அரைசதம் அடித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் பொலார்டு; முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை !! 3

20 ஓவர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார். கிறிஸ் கெய்ல் 404 ஆட்டத்தில் விளையாடி 13,296 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

மெக்கல்லம் (நியூசிலாந்து) 9,922 ரன்னுடன் 3-வது இடத்திலும், சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) 9,746 ரன்னுடன் 4-வது இடத்திலும், வார்னர் (ஆஸ்திரேலியா) 9,218 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *