என்னது பொலார்டு செத்துட்டாரா ? உண்மையில் நடந்தது என்ன ?
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கீரன் பொலார்டு கார் விபத்தில் மரணமடைந்ததாக இணையதளத்தில் போலியான செய்தி வைரலாகி இருக்கிறது. இந்த போலியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
கீரன் பொலார்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆவார். கீரன் பொலார்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 113 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் கீரன் பொலார்டு மூன்று முறை சதங்கள் விளாசி இருக்கிறார். இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மொத்தமாக 3800 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்.

இதைப்போல பந்துவீச்சிலும் 90 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கீரன் பொலார்டு பல்வேறு உள்ளூர் போட்டிகளில் பங்குபெற்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கீரன் பொலார்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகாலமாக விளையாடி வருகிறார்.
இதுபோக தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 தொடரில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அபுதாபியில் சிறப்பாக விளையாடி வரும் கீரன் பொலார்டு கார் விபத்தில் மரணமடைந்து விட்டதாக ரசிகர் ஒருவர் போலியான செய்தியை பரப்பி இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரசிகர்கள் உண்மையில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினர். இதன் பிறகுதான் இந்த செய்தியை போலியானது என்று கண்டறியப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் கீரன் பொலார்டு அபுதாபியில் நடைபெற்று வரும் தொடரில் விளையாடி வருகிறார். சிறப்பாக விளையாடி வரும் கீரன் பொலார்டு இறந்துவிட்டார் என்று போலியான செய்தியை பரப்பியது யார் என்று இன்னும் தெரியவில்லை. இதன் பிறகுதான் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.