மிகச் சிறந்த பினிஷர்களை கொண்ட அணி இதுதான்! சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை! விதண்டாவாதம் பேசும் ஆகாஷ் சோப்ரா
ஐபிஎல் தொடர் இந்தியாவில் 12 வருடங்களாக மிகப்பெரிய திருவிழாவைப் போல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெறும் மூன்று மைதானங்களில் மட்டுமே இந்த வருட ஐபிஎல் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன. இந்த அணிகள் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சரியான கலவையில் இருக்கும் அணிகள் முக்கியம். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அணியும் கோப்பையை வென்று இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது இருக்கும் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பினிஷிங் வீரர்களை கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ் தான் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உதறிவிட்டு பேசியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகச் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அந்த அணியை நான் முதலிடத்தில் வைப்பேன் கெரோன் பொல்லார்ட் இருக்கிறார். அவர்தான் டி20 கிரிக்கெட் ஜாம்பவான் தற்போது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் அவர் ஆடும் ஆட்டத்தைப் பாருங்கள் 28 பந்துகளில் 72 ரன்கள் குவித்திருக்கிறார். தொடர்ந்து இப்படித்தான் நன்றாக ஆடிக் கொண்டிருக்கிறார். சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடும் ஒரு வீரர் அவர். இதுதான் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் தேவை. இரண்டாவது இடத்தில் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வைப்பேன். அந்த அணியில் ஆண்ட்ரூ ரசல் இருக்கிறார் அதேபோல் இயான் மார்கன் தற்போது வந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்” ஆகாஷ் சோப்ரா.
இப்படி வாய்க்கு வந்ததை பேசும் ஆகாஷ் சோப்ரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மறந்துவிட்டார் போலிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் மகேந்திரசிங் தோனி, டுப்லஸ்ஸிஸ், ரவீந்திர ஜடேஜா, பிராவோ போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார் ஆகாஷ் சோப்ரா.