2021 கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் வீரர்களையும் தயார்படுத்திக் கொண்டு உள்ளனர், இந்நிலையில் வருகிற பிப்ரவரி 18 சென்னையில் நடக்க உள்ள இடத்தில் அனைத்து அணிகளும் எந்த வீரரை தேர்வு செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற தனது பெயரை பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது.இரண்டு வருடத்திற்கு முன் எவ்வாறு டெல்லி டேர்டெவில்ஸ் தனது பெயரை டெல்லி கேப்பிடல் சென்று மாற்றியது அதேபோன்று பஞ்சாப் அணியும் மாற்றியமைப்பதற்கு திட்டமிட்டு கொண்டுள்ளது.
மிகவும் பலம் வாய்ந்த கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை ஒருமுறை கூட டைட்டில் பட்டத்தை பெறாத மூன்று அணிகளில் ஒன்றாக திகழ்கிறது, இந்த ஆண்டு நிச்சயம் டைட்டில் பட்டத்தை வெல்லும் முனைப்போடு களமிறங்கியிருக்கும் பஞ்சாப் அணி, நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற வாய்ப்பை சிஎஸ்கே அணி தவிடுபொடி செய்தது, இதற்குமுன் 2014 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இறுதி சுற்று வரை முன்னேறியது, இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையிலான போட்டி கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டைட்டில் பட்டத்தை பெற்றது, அதற்குப் பிறகு ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணி முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெயர் மாற்றத்திற்கான ஒப்புதலை பிசிசிஐயிடமிருந்து அதிகாரப்பூர்வமாக பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். பஞ்சாப் அணி தனது பெயர் மாற்றத்தை மும்பையில் கோலாகலமாக தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளது. அதன்பின் வருகிற பிப்ரவரி 18 நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியின் இறுதி பங்கெடுக்க உள்ளது, அந்த ஏலத்தில் அனைவருக்கும் கோவில் டெஸ்ட் எடுத்த பிறகு அனுமதிக்கப்படுவர் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,
