ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக மகேந்திர சிங் தோனி கீப்பராக தேர்வானது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்ட அப்போதைய தேர்வு குழு தலைவர் கிரண் மோர் !
இந்திய அணி 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்குச் சென்று தோல்வி அடைந்தது. 2002 மற்றும் 2003 ஆகிய இரண்டு வருட காலகட்டத்தில் இந்தியாவிற்கு போது சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லை. இதன் காரணமாக ராகுல் டிராவிட் தான் அப்போது விக்கெட் கீப்பர் பணியை எடுத்து செய்து கொண்டார்.
தற்போது கேஎல் ராகுல் எப்படி ஒரு பேட்ஸ்மேனாக இருந்து திடீரென்று விக்கெட் கீப்பராக வேலை செய்து கொண்டிருக்கிறாரோ. அப்படித்தான் அப்போது ராகுல் டிராவிட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக், விஜய் தஹியா, பார்த்தீவ் பட்டேல் இன்னும் சில வீரர்கள் முழுநேர விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு பரிசோதனை செய்ய பார்க்கப்பட்டார்கள். ஆனால் ஒருவர் கூட இந்த பரிசோதனையில் முழுமையாக தேர்வு பெறவில்லை.

அந்த நேரத்தில்தான் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்தை திடீரென வந்து ஆணித்தரமாக அடித்துப்பிடித்து 18 வருடங்கள் பல சாதனைகள் புரிந்தார். இந்நிலையில் அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த கிரண் மோர் தோனியை எப்படி தேர்வு செய்தார் என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 75 சர்வதேச போட்டிகளில் விக்கெட் கீப்பராக வேலையை செய்து கொண்டார்.
அந்த பணியில் இருந்து ஓய்வு கொடுக்க திட்டம் தீட்டினோம். இதற்காக முழுநேர விக்கெட் கீப்பர்களை தேடி வந்தோம் அப்போது தான் தோனியின் பெயர் எங்களின் கண்களில் பட்டது. அவரது கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் வித்தியாசமான அணுகுமுறை என்பதால் கென்யா அணிக்கு எதிராக விளையாட இந்திய ஏ அணி திரண்டு இருந்தது.

அந்த அணியில் இவரைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 600 ரன்களுக்கு மேல் விளக்கினார். அந்த நேரத்தில் இந்திய அணியில் அதிரடியாக ஆட விரேந்தர் சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அப்போது தான் இவரையும் அணியில் சேர்த்தால் அதிரடியாக விளையாட இன்னொரு வீரர் இருப்பார் என்று நினைத்தோம். மற்றவர்களை காட்டிலும் இவர் அதிரடியாக விளையாடினார். இதன் காரணமாகத்தான் அவரை அணியில் சேர்த்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.
