இனி ஜெயிச்சு ஒரு பிரயோஜனும் இல்ல… போட்டி முடிவதற்குள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிய கொல்கத்தா; சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ்
நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபயர் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டி அடுத்த 21ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. குஜராத் அணி முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அடுத்ததாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும், இரண்டாவது இடத்தில் நீடிக்குமா இல்லை கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறுமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.
இந்தநிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இடத்திற்கு தகுதி பெறுவதற்கான நெட் ரன் ரேட்டை எட்ட தவறியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தை உறுதி செய்து, முதல் குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதே போல் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியே பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.