ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை... தற்காலிக கேப்டனை அறிவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! 1

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக யார் இருப்பார்? என்கிற கேள்விகள் எழுந்து வந்தது. தற்போது அதற்கு பதிலும் கிடைத்திருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 12.25 கோடி ரூபாய்க்கு  ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம். அதே சீசனில் இவருக்கு கேப்டன் பொறுப்பையும் கொடுத்தது. இவர்கள் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர் சனி 14 போட்டிகள் விளையாடி ஆறு வெற்றிகள் மற்றும் எட்டு தோல்விகளை பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை... தற்காலிக கேப்டனை அறிவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! 2

2022ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் இருந்தார். மிகச்சிறந்த பார்மில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீது இந்த வருடம் ஐபிஎல்லில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார். இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அறுவை சிகிச்சை செய்துகொண்டால், அடுத்த 6-7 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. ஆகையால் தற்காலிக சிகிச்சை மேற்கொண்டு விரைவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப ஷ்ரேயாஸ் ஐயர் முடிவு செய்திருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை... தற்காலிக கேப்டனை அறிவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! 3

இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாம் பாதியில் வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்? என்று கேள்விகள் எழுந்து வந்தது.

கேப்டன் யார் என்கிற அறிவிப்பை கொல்கத்தா அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பயணித்து வரும் நிதிஷ் ராணா,  விளையாடிய 5 சீசன்களிலும் 300 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். கேப்டன் அனுபவம்மிக்கவராக தற்காலிக கேப்டனாக பொறுப்பை கொல்கத்தா அணி நிர்வாகம் இவருக்கு கொடுத்திருக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை... தற்காலிக கேப்டனை அறிவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! 4

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *