முதலில் பந்துவீசுகிறது கொல்கத்தா அணி!! 1

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துவிட்டன. 56 போட்டிகள் கொண்ட தொடரில் 52 வது போட்டி பஞ்சாபில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்

இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டி என்பதால் போட்டியில் பரபரப்பு நிலவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதில் தோல்வியுறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் பந்துவீசுகிறது கொல்கத்தா அணி!! 2

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கே எல் ராகுல், கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், மன்டிப் சிங், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), சாம் குரான், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஆண்ட்ரூ டை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிறிஸ் லின், ஷுப்மான் கில், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், சுனில் நாரைன், ரிங்கு சிங், பியுஷ் சாவ்லா, சந்தீப் வார்ரியர், ஹாரி கர்னி

முதலில் பந்துவீசுகிறது கொல்கத்தா அணி!! 3

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியில் இரு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டேவிட் மில்லர் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் முஜிப் உர் ரகுமான் இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை இருவரும் அணியில் இடம் பெறுகின்றனர்.

அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சென்ற போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் எவ்வித மாற்றமுமின்றி களமிறங்குகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *