கொல்கத்தா அணியில் இணைகிறார் அதிரடி நாயகன்... ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு மாற்று வீரராக அறிவிப்பு! 1

அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக விலகுகிறார் என்கிற செய்தி வந்ததால், இன்று அவருக்கு மாற்றுவீரரை அறிவித்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கவிதமாக அணியின் கேப்டன் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது.

கொல்கத்தா அணியில் இணைகிறார் அதிரடி நாயகன்... ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு மாற்று வீரராக அறிவிப்பு! 2

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போகிறார் என்பது உறுதியானதால் மீதம் இருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக விலகியுள்ளார். மேலும் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் ஐபிஎல் போட்டிகளுக்கு இருக்கமாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். இரண்டு முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாதது பெருத்த பின்னடைவை கொடுத்திருக்கிறது.

கொல்கத்தா அணியில் இணைகிறார் அதிரடி நாயகன்... ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு மாற்று வீரராக அறிவிப்பு! 3

இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களை தேடும் பணியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்-இடம் பேச்சுவார்த்தை நடத்தியது  ஆரம்ப விலையான 1.5 கோடி ரூபாய்க்கு இருந்த இவரை 2.8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஜேசன் ராய், கடைசியாக 2021ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாற்று வீரராக எடுக்கப்பட்டு விளையாடினர். ஐந்து போட்டிகளில் விளையாடி 150 ரன்கள் அடித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். பின்னர் சொந்த காரணங்களுக்காக விலகினார்.

அதேபோல் 2021ஆம் ஆண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். அப்போதும் ஐபிஎல் தொடரில் விளையாடலாம் சொந்த காரணகளுக்காக விலகினார். இவர் இதுவரை டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியில் இணைகிறார் அதிரடி நாயகன்... ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு மாற்று வீரராக அறிவிப்பு! 4

இவரை கொல்கத்தா அணி எடுத்திருப்பதால், ஓபனிங்  பிரச்சினை தீர்ந்தது. இனி வெங்கடேஷ் ஐயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடந்த சீசனைப்போல் அதிரடியான ஆடலாம்.

சாகிப் அல் ஹசன் இல்லாததால் ஆல்ரவுண்டர் ஒருவரை எடுப்பதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முனைப்புக்காட்டி வருகிறது. வீரரை உறுதிசெய்து, இதற்கான அறிவிப்பும் இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவரும் என்று கொல்கத்தா தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *