கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கோல்ட்டர் நைல் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என அந்த அணியின் கேப்டன் கவுதம் கம்பிர் கூறியுள்ளார். ரைசிங் புனே சூப்பர்ஜெயண்டுக்கு எதிரான போட்டிக்கு கோல்ட்டர் நைலுக்கு கம்பிர் ரெஸ்ட் அளித்தார்.
‘எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசுகிறார்கள். அடுத்த போட்டி 28-ஆம் தேதி டெல்லியுடன் நடப்பதால், நைல் ஆரோக்யமாக இருக்க வேண்டும்’ என கம்பிர் கூறினார்.
மேலும்,’நாங்கள் நன்றாக சேசிங் செய்கிறோம் என்று நினைக்கிறன். 180 ரன்னுக்குள் எதிரணியை முடித்துவிட்டால், நாங்கள் சேஸ் பண்ணிவிடுவோம் என்று நம்புகிறோம்’ எனவும் கூறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்து வீசினார் கோல்ட்டர் நைல். அவர் 3 விக்கெட்டை எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும் 2 தோல்வியும் கண்டுள்ளது.