இரண்டு இளம் வீரர்கள் விலகல்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு
ஐ.பி.எல் டி.20 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர்களான சிவம் மாவி மற்றும் நாகர்கொட்டி ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது.
இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
இருவரும் தற்போது காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்த சீசனில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெறவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமான அணியில் இருந்து விலகினார். தற்போது அவர் உடற்தகுதி பெற்றுவிட்டார். இதனால் மும்பை அணிக்காக அவர் களம் இறங்குகிறார்.
முன்னாள் இந்திய அணி கேப்டனான சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிட்டலஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தயாரான தல தோனி;
ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 16) முதல் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து, எஞ்சியுள்ள சென்னை அணியின் வீரர்கள் சொந்த வீடு திரும்பி வருகின்றனர்.
சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கேதர் ஜாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “மூன்று சிங்கங்கள்… சென்னைக்கு புறப்பட்டுள்ளன, நம்ம தல-க்கு வணக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.