கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
15வது ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா (25) மற்றும் சுப்மன் கில் (7) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் கூட்டணி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – டேவிட் மில்லர் ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு பொறுமையாக ரன் சேர்த்தது.
டேவிட் மில்லர் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட நேரம் தாக்குபிடித்த ஹர்திக் பாண்டியா 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர், குறிப்பாக போட்டியின் கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரியூ ரசல் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள குஜராத் அணி 156 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரசல் 4 விக்கெட்டுகளையும், சிவம் மாவி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் நான்கு வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதன் மூலம் போட்டியின் 8 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஆண்ட்ரியூ ரசல் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீடியோ;