நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் பணுகா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
10 அணிகளை கொண்ட இந்த தொடரில் எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு அணிகளும் மிக தீவிரமாக விளையாடி வருகிறது, மேலும் பல இளம் வீரர்கள் இந்த தொடரில் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்களை நிரூபித்துக் கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அந்த வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இலங்கை அணியின் இடதுகை பேட்ஸ்மேன் பணுகா ராஜபக்சே 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தான் வெற்றி கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,“இது பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியமான நேரம், பஞ்சாப் அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன்ஷிப் வென்றது கிடையாது, இதன்காரணமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் இலக்கை அடைவோம், இந்த நேரம் எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது தற்போது நாங்கள் ஒவ்வொருவரும் அணியை வலுப்படுத்துவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மற்ற வருடத்தை விட இந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் டைட்டில் பட்டத்தை வெற்றி பெறும் என்று பணுகா ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
உடல் தகுதி(fitness) இல்லை என்று இலங்கை அணியில் இருந்து ஓரம்கட்ட ராஜபக்சே ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலேயே மிகவும் அதிரடியாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.