25 கோடி... 25 கோடினு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க ஆனா...? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க் !! 1
25 கோடி… 25 கோடினு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க ஆனா…? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க்

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசால்டாக வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

17வது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. ஸ்டார்கை ஏலத்தில் எடுத்தே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடும் போட்டிக்கு பிறகு மிட்செல் ஸ்டார்கை 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

25 கோடி... 25 கோடினு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க ஆனா...? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க் !! 2

ஐபிஎல் தொடரில் பெரிதாக ஆர்வம் காட்டாத, சீனியர் வீரர் ஒருவர் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தா அணியின் இந்த முடிவு தவறானது, மிட்செல் ஸ்டார்கால் கொல்கத்தா அணிக்கு எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை என்றே பலரும் விமர்சித்து பேசினர். ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலும் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் சொதப்பியதால் மிட்செல் ஸ்டார்கும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார்.

ஆரம்பத்தில் சொதப்பினாலும், கடைசி நேரத்தில் நடைபெற்ற அனைத்து முக்கியமான போட்டிகளிலும் பந்துவீச்சில் தரமாக செயல்பட்ட மிட்செல் ஸ்டார்க் தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் சரியான பதலடி கொடுத்ததோடு, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். குறிப்பாக முதல் குவாலிபயர் மற்றும் இறுதி போட்டி இரண்டிலும் முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி  கொடுத்த மிட்செல் ஸ்டார்க், இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு, கொல்கத்தா அணியின் வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய மிட்செல் ஸ்டார்க், தன் மீதான விமர்சனம் மற்றும் கிண்டல்கள் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.

25 கோடி... 25 கோடினு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க ஆனா...? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க் !! 3

இது குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசுகையில், “இந்த இரவு எங்கள் அணிக்கு மிக சிறப்பான இரவாக அமைந்துள்ளது. இந்த போட்டி மட்டும் இல்லாமல், இந்த தொடர் முழுவதிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளோம். எங்கள் அணியில் மிக சிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருப்பதால், பந்துவீச்சே எங்களது பெரிய பலமாக இருந்தது. அதே போன்று பேட்ஸ்மேன்கள், நிர்வாகிகள் என அனைவரும் தங்களது வேலைகளையும், கொல்கத்தா அணிக்கான தங்களது பங்களிப்பையும் சரியாக செய்து கொடுத்ததன் மூலமே எங்களுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என கருதுகிறேன். கொல்கத்தா அணியின் நிர்வாகிகளிடம் இருந்தும், பயிற்சியாளர்களிடம் இருந்தும் எங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைத்தது. வெறும் ஓரிரு போட்டிகள் என மட்டும் இல்லாமல் இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி தற்போது சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

25 கோடி... 25 கோடினு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க ஆனா...? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க் !! 4

மேலும் பேசிய ஸ்டார்க், “கொல்கத்தா அணியின் அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இது,  கொல்கத்தா அணி வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் டாஸை இழந்தாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆடுகளத்தின் தன்மை குறித்தும் எங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆடுகளத்தின் தன்மை மாறி கொண்டே இருந்ததால் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஆடுகளம் எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ப போட்டியின் வியூகங்களை மாற்றி கொள்ள வேண்டும் என தீர்மானித்திருந்தோம். ஸ்ரேயஸ் ஐயர் கேப்டன்சியில் மிக சிறப்பாக செயல்பட்டார். இந்த வெற்றிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் முக்கியமான காரணம். பந்துவீச்சாளர்கள் தங்களது திறமை என்ன என்பதையும், தங்களால் என்ன முடியும் என்பதையும் நிரூபித்து காட்டிவிட்டனர். ஐபிஎல் தொடருக்கான எனது சம்பளம் குறித்து பலரும் விமர்சித்தனர், பலரும் எனது சம்பளத்தை வைத்து என்னை கிண்டலடித்து பேசினர், ஆனால் இது போன்ற பல விசயங்களை கடந்து வந்துள்ளதால் இதை பற்றி எல்லாம் நான் பெரிதாக கவலை கொள்ளவில்லை. வயதும், அனுபவமும் சற்று அதிகமாக இருப்பதால் என்னால் இது போன்ற பிரச்சனைகளை இலகுவாக கடந்து செல்ல முடிகிறது. அணியின் ஒட்டுமொத்த வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள். கொல்கத்தா அணியுடனான இந்த தொடர் எனக்கு மிக சிறப்பானதாக இருந்தது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *