எங்களோட தோல்விக்கு காரணம் கேஎல் ராகுல் ஜடேஜா இல்லை... இந்த ஒரு மோசமான சம்பவம் தான் காரணம் - ஸ்டீவ் ஸ்மித் பேச்சு! 1

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான், ஜடேஜா – கேஎல் ராகுல் பார்ட்னர்ஷிப் இல்லை என்று பேசியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய மிச்சல் மார்ஷ் வெறும் 65 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் அடங்கும்.

எங்களோட தோல்விக்கு காரணம் கேஎல் ராகுல் ஜடேஜா இல்லை... இந்த ஒரு மோசமான சம்பவம் தான் காரணம் - ஸ்டீவ் ஸ்மித் பேச்சு! 2

அடுத்த அதிகபட்சமாக ஸ்மித் 22 ரன்கள், இங்கிலிஷ் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதனால் முழுமையாக 50 ஓவர்கள் கூட ஆஸ்திரேலியா அணியால் பிடிக்க முடியவில்லை.

ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா, 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

எங்களோட தோல்விக்கு காரணம் கேஎல் ராகுல் ஜடேஜா இல்லை... இந்த ஒரு மோசமான சம்பவம் தான் காரணம் - ஸ்டீவ் ஸ்மித் பேச்சு! 3

எளிய இலக்காக தெரிந்த இந்த ஸ்கொரை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்பரன்களுக்கு அவுட்டாக, 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாற்றம் கண்டது.

அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா 5வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 44 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா 25 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்துவந்த ஜடேஜா நம்பிக்கையளிக்கும் விதமாக கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

எங்களோட தோல்விக்கு காரணம் கேஎல் ராகுல் ஜடேஜா இல்லை... இந்த ஒரு மோசமான சம்பவம் தான் காரணம் - ஸ்டீவ் ஸ்மித் பேச்சு! 4

ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி இறுதிவரை நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. ஜடேஜா 45 ரன்களும், கேஎல் ராகுல்  75 ரன்களும் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 39.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலை பெற்றது.

தோல்வியை சந்தித்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“வன்கடே மைதானத்தில் இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக இங்கு நல்ல ஸ்கோர்கள் அடிக்கலாம். இந்திய அணி மிகச் சிறப்பாக பந்துவீசியது என்றே கூற வேண்டும். ஒருவேளை, நாங்கள் 250 ரன்களை கடந்திருந்தால் இந்த ஆட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஏனெனில் பந்துவீச்சில் நல்ல ஸ்விங் மற்றும் வேகம் இருந்தது. கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் அழுத்தமான சூழலிலும் மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். 

எங்களோட தோல்விக்கு காரணம் கேஎல் ராகுல் ஜடேஜா இல்லை... இந்த ஒரு மோசமான சம்பவம் தான் காரணம் - ஸ்டீவ் ஸ்மித் பேச்சு! 5

நாங்கள் நன்றாக பேட்டிங்கை துவங்கினோம். மார்ஷ் அபாரமாக விளையாடி ஆட்டத்தை வேகமாக எடுத்துச் சென்றார். நடுவில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு துவக்க புள்ளியாக அமைந்துவிட்டது. நல்ல பாட்னர்ஷிப் எங்களுக்கு அமையவில்லை அதுதான் தோல்விக்கு மிக முக்கிய காரணம். நாங்கள் தோல்வியுறும் அனைத்து போட்டிகளிலும் பார்ட்னர்ஷிப் அமையாது தான் முக்கியமான காரணமாக இருந்துள்ளது. இன்றைய போட்டியிலும் அதுதான் நடந்தது. 

ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இந்த விக்கெட்டில் எப்படி ஆட வேண்டும் என்று காட்டினார்கள். 260-270 ரன்கள் அடித்திருந்தால் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருப்போம். இந்த விக்கெட் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் 30 ஓவர்களில் இரு இன்னிங்சிலும் நன்றாக ஸ்விங் ஆனது. இந்திய அணியினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *