கேஎல் ராகுல் ரோகித் சர்மாவிற்கு நெருங்கிய நண்பர்ன்னு ஒரே காரணத்துக்காக இன்னும் டீம்ல இருக்காரா? – காரணத்தை சொன்ன ராகுல் டிராவிட்!

முதல் இரண்டு டெஸ்டில் சொதப்பலாக விளையாடிய கேஎல் ராகுல் எதற்காக இன்னும் பிளேயிங் லெவனில் வைக்கப்பட்டிருக்கிறார்? என்று கேள்வி எழுப்பிய நிருபருக்கு பதில் கொடுத்திருக்கிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

தொடர்ச்சியாக இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறது. வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரில் துவங்கி தற்போது வரை விளையாடியுள்ள அனைத்து தொடரையும் கைப்பற்றிவிட்டது.

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்றது. இதனால் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், முன்னணி துவக்க வீரர் கேஎல் ராகுல்-ஐ இன்னும் எதற்காக அணியில் வைத்திருக்கிறீர்கள், நன்றாக ஆடிவரும் ஷுப்மன் கில் பிளேயிங் லெவனுக்குள் வரவேண்டும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில், கேஎல் ராகுல் லிமிட்டட் ஓவர் போட்டிகளில் சொதப்பலான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தார். அதனால் துணைகேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவ்வப்போது வெளியிலும் அமர்த்தப்பட்டார்.

ஆனாலும் கேஎல் ராகுல் மீது நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்டுகள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி நன்றாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் கேஎல் ராகுல் மூன்று இன்னிங்ஸ்களில் மொத்தம் 38 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

டெல்லியில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 115 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தபோது பொறுப்பின்றி ஒரு ரன்னில் கேஎல் ராகுல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அணி நிர்வாகம் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இவரை எடுத்திருக்கிறது.

a

இவருக்கு ஏன் இவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? எதனடிப்படையில் இன்னும் பிளேயிங் லெவனில் நீடித்து வருகிறார்? என்று இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ராகுல் டிராவிட் இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கொடுத்த அவர்,

“கேஎல் ராகுல் வெளிநாட்டு மைதானங்களில் மிகச்சிறந்த ரெக்கார்ட் வைத்திருக்கிறார். டெஸ்டில் சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இதனால் அணி நிர்வாகம் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இதற்கு கிடையாது.

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மைதானங்களில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. கேஎல் ராகுல் அதை செய்து காட்டியிருக்கிறார். அவரிடம் நேர்த்தியான ஆட்டம் மற்றும் அதீத திறமை இருக்கிறது. இதில் அனைவருக்கும் சந்தேகம் இல்லை. இந்த கடினமான காலகட்டத்தை கடந்து வெளியே வந்தால் நிச்சயம் மிகப்பெரிய ஸ்கோர்களை அடிக்கக் கூடியவர். வெறுமனே ரன்கள் அடிக்க வில்லை என்பதற்காக வெளியில் அனுப்புவது மீது எனக்கு நம்பிக்கை இல்லை.” என்று ராகுல் டிராவிட் கூறினார்.

Mohamed:

This website uses cookies.