இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் குடல் அழற்சி சம்பந்தமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். தற்பொழுது அவர் சிகிச்சை முடிந்தவுடன் நலமாக தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட கேஎல் ராகுல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஎல் ராகுல் அல்லது விருத்திமான் சஹா
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் காண வீரர்களை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதில் இறுதியில் ராகுல் மற்றும் சஹா ஆகிய இருவரின் பெயரையும் பிசிசிஐ இணைத்து இருந்தது. இருப்பினும் இவர்கள் இருவரில் யார் நல்ல உடல் தகுதியுடன் விரும்புகிறார்களோ அவர்களுக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் இவர்கள் இருவரும் தற்போது ஓரளவுக்கு பழையபடி விளையாடும் அளவுக்கு நல்ல உடல் தகுதியுடன் திரும்பி இருக்கின்றனர். சஹா தற்பொழுது நிச்சயமாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் கே எல் ராகுல் தற்பொழுது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத கே எல் ராகுல்
கேஎல் ராகுல் 2019ஆம் ஆண்டு தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பல டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றிருந்தாலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க படாமல் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருந்தார்.

எனவே அவர் இந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அல்லது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினால் இரண்டு ஆண்டுகள் கழித்து விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாக அமையும். இருப்பினும் ரிஷப் பண்ட் அதிரடியான பார்மில் உள்ளதால் அவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒருவேளை சஹா அல்லது கே எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இவர்கள் இருவரில் யார் நல்ல விளையாடும் தகுதியுடன் இருக்கின்றார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.