கோஹ்லிக்கு அடுத்த கே.எல் ராகுல் தான் பெஸ்ட்; கர்நாடகா பயிற்சியாளர் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோஹ்லிக்கு அடுத்தபடியாக கே.எல் ராகுல் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்று ராஞ்சி தொடருக்கான கர்நாடகா அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால கிட்டத்தட்ட 11.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கே.எல் ராகுல் அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டார்.

தன் மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் அணியின் நம்பிக்கையை வீண்டிக்காமல் முதல் போட்டியிலேயே வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து பஞ்சாப் அணியில் தனது பயணத்தை துவங்கிய ராகுல் அடுத்தடுத்த போட்டிகளிலும் அந்த அணியின் மிகப்பெரிய தூணாக விளங்கி வருகிறார்.
அனைத்து விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இவருக்கான இடம் காத்துள்ள நிலையில், இந்திய அணியில் கோஹ்லிக்கு அடுத்தப்டியாக கே.எல் ராகுல் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் என்று ராஞ்சி தொடருக்கான கர்நாடகா அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடகா அணியின் பயிற்சியாளரான சாக்சிகாந்த் கூறியதாவது “இந்திய அணியில் கோஹ்லிக்கு அடுத்து கே.எல் ராகுல் சிறந்த பேட்ஸ்மேன். ஐ.பி.எல் தொடரில் அவரின் இந்த அதிரடி ஆட்டம் அவரின் பேட்டிங்கில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை முதல் முறை பார்த்தபோதே அவர் என்னை கவர்ந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.