ரெடியாக இருக்கும் மனிஷ் பாண்டே மற்றும் லோகேஷ் ராகுல்

கதை என்ன?

இந்திய அணியின் இளம் வீரர்கள் மனிஷ் பாண்டே மற்றும் லோகேஷ் ராகுல் திரும்பி காயத்தில் இருந்து மீண்டு வருவதால், எதிர்காலத்தில் இந்திய அணியின் பலம் கூடும். இரண்டு கர்நாடக வீரர்களும் காயத்தில் அவதிப்பட்டு கொண்டிருந்ததால், சிறிது நாட்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.

ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…

இரண்டு கர்நாடக வீரர்களும் காயத்தில் அவதிப்பட்டு கொண்டிருந்ததால், சிறிது நாட்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. இந்தியாவில் விளையாடிய ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது லோகேஷ் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இந்தியாவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டேவுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால், இங்கிலாந்தில் நடந்த 8வது சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் இடம் பிடிக்க முடியவில்லை. மனிஷ் பாண்டேவின் பெயர் இந்திய அணியில் இருந்தது, ஆனால் அவர் காயத்தில் இருந்து மீளாதால், அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பல நாட்களுக்கு பிறகு இடம் பிடித்தார்.

விவரங்கள்:

அவர்கள் பல போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கிடைத்தை வாய்ப்பில் அவர்கள் யார் என்று நிரூபித்தார்கள். 2016 ஜனவரியில் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 330 இலக்கை இந்திய அணி துரத்திய போது, மனிஷ் பாண்டே அவுட் ஆகாமல் 104* அடித்து இந்திய அணிக்கு வெற்றியை வாங்கி தந்தார். டி20 அணியில் அவரை அழைக்கப்பட்டது, அதன் பிறகு 2016 டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியின் போது யுவராஜ் சிங் காயம் அடைந்து விட்டதால், அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டேவை அணியில் சேர்த்தனர்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த மனிஷ் பாண்டே, இந்திய அணியில் இடம் பிடித்து பட்டையை கிளம்புவார் என்று நினைத்தோம், ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன் காயத்தால் அந்த தொடரை விட்டு விலகினார். மறுபக்கம், தோள்பட்டை காயத்தோடு பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் முழுவதும் பேட்டிங் செய்தார் லோகேஷ் ராகுல். தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பெங்களூரு வீரரான லோகேஷ் ராகுலுக்கு பச்சை கோடி ஆட்டினர்.

அடுத்தது என்ன?

மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் முக்கியமாக யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் பார்மில் இல்லாததால், மனிஷ் பாண்டே மற்றும் லோகேஷ் ராகுலை அணியில் சேர்ப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். தற்போது விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இந்த தொடரில் புதுப்பித்தால், இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு குழப்பம் அதிகரிக்கும்.

எழுத்தாளரின் கருத்து:

 

மனிஷ் பாண்டே மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தெறி பார்மில் இருப்பதால் 2019-இல் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்வது கடினம். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இலங்கை அணியுடன் நீண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதற்கான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.