கே.எல் ராகுலுக்கு பதிலாக இவரை துவக்க வீரராக களமிறக்கலாம்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ் !! 1

கே.எல் ராகுலுக்கு பதிலாக இவரை துவக்க வீரராக களமிறக்கலாம்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஜோடி தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் யாரை தொடக்க வீரர்களாக களமிறக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மிக மோசமாக உள்ளது. தொடக்க வீரர்களால் பயனே இல்லை எனும் அளவிற்கு உள்ளது. இங்கிலாந்திலும் மோசமாக ஆடினர், தற்போது ஆஸ்திரேலிய தொடரிலும் படுமோசமாக சொதப்பிவருகின்றனர்.

கே.எல் ராகுலுக்கு பதிலாக இவரை துவக்க வீரராக களமிறக்கலாம்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ் !! 2

முரளி விஜயும் ராகுலும் அத்தி பூத்தாற்போல ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ஓரளவிற்கு ஆடுகின்றனர். இந்திய அணிக்கு நம்பிக்கையளித்த பிரித்வி ஷாவும் காயத்தால் தொடரிலிருந்து விலகிய நிலையில், முதலிரண்டு போட்டிகளில் முரளி விஜயும் ராகுலும் படுமோசமாக சொதப்பிவிட்டனர்.

பிரித்வி ஷா காயத்தால் விலகியதால் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடக்க ஜோடி குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் மஞ்சரேக்கர், ஹனுமா விஹாரியின் பேட்டிங் டெக்னிக் சிறப்பாக உள்ளது. பயமோ பதற்றமோ இல்லாமல் நிதானமாக சிறப்பாக ஆடுகிறார். அவரது பேட்டிங் டெக்னிக் நன்றாக இருப்பதால் அவரையே கூட ஆஸ்திரேலியாவில் ஓபனிங் இறக்கலாம்.

கே.எல் ராகுலுக்கு பதிலாக இவரை துவக்க வீரராக களமிறக்கலாம்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ் !! 3

மயன்க் அகர்வாலை தொடக்க வீரராக களமிறக்கினாலும் அவரிடமிருந்து உடனடியாக பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் எடுத்த எடுப்பிலேயே ஆஸ்திரேலியாவில் ஆடுவது எளிதான காரியம் அல்ல. மயன்க் அகர்வாலுக்கு தேவையில்லாமல் கூடுதல் அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்றோ ரிஸ்க் எடுக்க வேண்டாமென்றோ நினைத்தால் முரளி விஜயையும் ஹனுமா விஹாரியையும் தொடக்க வீரர்களாக இறக்கலாம். ஆனால் மயன்க் அகர்வாலும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக இறங்கலாம் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார் மஞ்சரேக்கர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 26ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *