யோவ் கேஎல் ராகுல் இங்கதான் நீ பெரிய மனுஷனா நிக்கிற.... கேஎல் ராகுலின் 5 வருட ரெக்கார்டை காலி செய்த ஜெய்ஸ்வால்... அதுக்கு கேஎல் ராகுல் இப்படியொரு பாராட்டா?! - வேறலெவல் ப்பா! 1

தன்னுடைய ஐந்து வருட சாதனையை முறியடித்த யஷஷ்வி ஜெய்ஸ்வால்-க்கு ட்விட்டரில் பாராட்டை பதிவிட்டுள்ளார் கேஎல் ராகுல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் முதலாவதாக பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய யுசுவேந்திர சகல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

யோவ் கேஎல் ராகுல் இங்கதான் நீ பெரிய மனுஷனா நிக்கிற.... கேஎல் ராகுலின் 5 வருட ரெக்கார்டை காலி செய்த ஜெய்ஸ்வால்... அதுக்கு கேஎல் ராகுல் இப்படியொரு பாராட்டா?! - வேறலெவல் ப்பா! 2

சஹல், 183 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த டிவைன் பிராவோ சாதனையை முறியடித்து, 187 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அடுத்ததாக, கொல்கத்தா அணி நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் இறங்கி இதுவரை காணாத அதிரடியை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் முதல் மூன்று ஓவர்கள் முடிவதற்குள்ளேயே, 13 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்கிற புதிய வரலாற்றை படைத்திருக்கிறார்.

யோவ் கேஎல் ராகுல் இங்கதான் நீ பெரிய மனுஷனா நிக்கிற.... கேஎல் ராகுலின் 5 வருட ரெக்கார்டை காலி செய்த ஜெய்ஸ்வால்... அதுக்கு கேஎல் ராகுல் இப்படியொரு பாராட்டா?! - வேறலெவல் ப்பா! 3

கடந்த 2018ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த கேஎல் ராகுல், டெல்லி அணியுடன் மோதிய போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த பாட் கம்மின்ஸ், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்திருந்தார்.

யோவ் கேஎல் ராகுல் இங்கதான் நீ பெரிய மனுஷனா நிக்கிற.... கேஎல் ராகுலின் 5 வருட ரெக்கார்டை காலி செய்த ஜெய்ஸ்வால்... அதுக்கு கேஎல் ராகுல் இப்படியொரு பாராட்டா?! - வேறலெவல் ப்பா! 4

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக யஷஷ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து இவர்களின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு ஜாம்பவான்கள் பலரிடம் இருந்தும் பராட்டுக்கள் குவிகின்றன.

2018ஆம் ஆண்டிலிருந்து கடந்த போட்டி வரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தன்வசம் இருந்த அதிவேக அரைசதம் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்ததற்கு “தலை வணங்குகிறேன்.” என்கிறவாறு ஜெய்ஸ்வால்-க்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் கேஎல் ராகுல்.

யோவ் கேஎல் ராகுல் இங்கதான் நீ பெரிய மனுஷனா நிக்கிற.... கேஎல் ராகுலின் 5 வருட ரெக்கார்டை காலி செய்த ஜெய்ஸ்வால்... அதுக்கு கேஎல் ராகுல் இப்படியொரு பாராட்டா?! - வேறலெவல் ப்பா! 5

தன்னுடைய சாதனையை முறியடித்தவர் மற்றும் இந்திய அணியில் தனது இடத்திற்கு போட்டியாக வரக்கூடியவர் என்றெல்லாம் துளியும் பார்க்காமல் இளம்வீரரின் அசாத்திய திறமையை அங்கீகரித்து கேஎல் ராகுல் பாராட்டியது பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *