கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எஸ்கேப் ஆகிறாரா விராட் கோஹ்லி 1

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எஸ்கேப் ஆகிறாரா விராட் கோஹ்லி

பொதுவாக எந்தவொரு சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி கிளம்பினாலும், அதற்கு முன்னதாக கேப்டன் பிரஸ் மீட்டில் கலந்துகொள்வது வழக்கம்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கவுள்ளது. அதன்பிறகு மற்ற போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணி நாளை அமெரிக்கா புறப்படுகிறது.

பொதுவாக எந்தவொரு சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி கிளம்பினாலும், அதற்கு முன்னதாக கேப்டன், பிரஸ் மீட்டில் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் நாளை இந்திய அணி கிளம்பவுள்ள நிலையில், கேப்டன் கோலி பிரஸ் மீட் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் இடையே மோதல் என்ற செய்தி கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாய் பரவி பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் வழிவகுத்து கொடுத்துள்ளது. எனவே பிரஸ் மீட்டில் கலந்துகொண்டால் ரோஹித்துடனான மோதல் குறித்து கண்டிப்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதால், அதை தவிர்ப்பதற்காக பிரஸ் மீட்டே கொடுக்க வேண்டாம் என்று கோலி முடிவெடுத்துள்ளாராம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *