இந்தியா இங்கிலாந்து இரு அணிகள் மோதிக்கொண்ட முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் கேப்டன் கோஹ்லி கேப்டன் பொறுப்பில் புதிய சாதனை படைத்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஆடுகிறது.

இதற்க்கான முதல் ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மைதானம் பேட்டிங் க்கு சாதகமாக இருக்கும் என்பதால், துவக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் பைர்ஸ்டோவ் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினர். 10.2 ஓவர்களுக்கு 71 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ராய் குலதீப் பந்தில் உமேஷ் யதாவிடம் கேட்ச் கொடுத்து 38 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்து வந்த ரூட் நன்றாக ஆடுவர் என எதிர்பார்த்த நிலையில், சொற்ப ரன்களுக்கு குலதீப் பந்தில் வெளியேறினார். அடுத்த கணமே நன்றாக ஆடிக்கொண்டிருந்த பைர்ஸ்டோவ் குலதீப் சூழலில் சிக்கி 38 ரன்களுக்கு வெளியேற இங்கிலாந்து அணி தடுமாறியது.
கேப்டன் மோர்கன் நிலைத்து ஆடுவார் என நினைத்த மறுகணமே மற்றொரு சூழல் பந்துவீச்சாளர் சஹாலிடம் சிக்கி வெளியேறினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 105/4 என தடுமாறிய நிலையில், அதிரடி ஆட்டக்காரர்களான பட்லர்-ஸ்டோக்ஸ் இருவரும் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டு, 5வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லரும் குலதீப் பந்தில் 53 ரன்களுக்கு தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட்லர் அவுட் ஆனா சிறிது நேரத்திலேயே ஸ்டோக்ஸ் அதே குலதீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக மொயின் அலி அடில், ரஷீத் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை நல்ல ஸ்கோர் க்கு எடுத்து சென்றனர்.
49.5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய குலதீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சற்று எளிய இலக்கை துரத்திய இந்திய னியின் துவக்க வீரர்கள் தவான்-ரோஹித் ஜோடி துவக்கம் முதலே தனது அதிரடியை ஆரம்பித்தனர். 7.4 ஓவர்களில் 59 ரன்களை சேர்த்த இந்த ஜோடியில், மொயின் அலி பந்தில் தவான் அடிக்க முயற்சித்து 27 பந்துகளுக்கு 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கே எல் ராகுல் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்காட்ட நிலையில், வழக்கம் போல 3வது வீரராக கேப்டன் கோஹ்லி களமிறங்கினார். எப்பொழுதும் போலவே ரோஹித் – கோஹ்லி இருவரும் நிதானமாகவும், ஆனபோது தனது அதிரடியையும் காட்டி நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்தனர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் கோஹ்லி ரஷீத் பந்தில் ஸ்டும்ப்பிங் மூலம் அவுட் ஆகி வெளியேறினார். இவர் 82 ரங்களுக்கு 75 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக சிறப்பாக ஆடி வந்த ரோஹித் ஒருநாள் போட்டியில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் இந்திய அணி, 40.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் மற்றும் 59 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

குலதீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இது கேப்டன் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பில் 50வது ஒருநாள் போட்டியாகும். கேப்டன் பொறுப்பில் தனது 39வது வெற்றியையும் பதிவு செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிளைவ் லோயிட் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.