உலக கோப்பை தொடர் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிறது எண்ணமும் அதையே சொல்லிக் காட்டாதீர்கள் என நிருபர்களிடம் சற்று கடுப்பானார் விராட் கோலி.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங். அதை முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் மற்றும் பல ரசிகர்களும் தொடர்ந்து இந்திய அணியிடம் சுட்டிக்காட்டிக் கொண்டே வந்தனர்.
இந்நிலையில் உலக கோப்பை தொடர் நிறைவு பெற்றவுடன் முதல் கட்டமாக பிசிசிஐ கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் அணியை விட்டு நீக்கியது. அதன்பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்நிலையில், கடந்த திங்களன்று மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு இன்னும் தீர்வு காணவில்லையா? எப்போதுதான் சரி செய்வீர்கள்? என நிருபர் ஒருவர் விராட் கோலியிடம் கேட்டார்.
ravikr
அதற்கு பதிலளித்த விராட் கோலி, இந்திய அணியில் முதல் மூன்று துவக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். அவர்கள் சிறப்பாக ஆடும் போது மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படவில்லை. துவக்க வீரர்கள் சோதப்பினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆடும் சூழல் உருவாகிறது. அப்போது அவர்கள் ஆடினால் போதுமானது.
மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம், அடுத்தடுத்த போட்டிகளில் அது தெரிய வரும். தொடர்ந்து அதையே சொல்லிக்காட்ட வேண்டாம். பொறுமையிடன் இருந்து கவனியுங்கள் என சற்று கட்டமாக பதிலளித்தார்.