கோஹ்லியின் மிகப்பெரிய பலமே தல தோனி தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

கோஹ்லியின் மிகப்பெரிய பலமே தல தோனி தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3கோஹ்லியின் மிகப்பெரிய பலமே தல தோனி தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

SAMAD/AFP/Getty Images)

கோஹ்லியின் மிகப்பெரிய பலமே தல தோனி தான்; முன்னாள் வீரர் சொல்கிறார்

இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இடத்தை இந்திய அணியில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற முன்னாள் கேப்டன் தோனி, கடந்த வருடம் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை துறந்தார்.

இதன் பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கோஹ்லியின் கீழ் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

தோனியின் சாதனைகள் உலகறிந்த போதிலும், ஒரு தொடரில் அவர் விளையாடாவிட்டால் அவருக்கு வயதாகிவிட்டது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று விமர்ச்சனங்கள் அவர் மீது அடிக்கடி எழுவது வழக்கம்.

கோஹ்லியின் மிகப்பெரிய பலமே தல தோனி தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1கோஹ்லியின் மிகப்பெரிய பலமே தல தோனி தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

அந்த வகையில் தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு தொடரில் தோனி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து தற்போது வலுத்துள்ளது.

முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் இது குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரன் மோர், தோனி அணியில் இருப்பது கோஹ்லி தான் பலம் என்று தெரிவித்துள்ளார்.

MS Dhoni of India during the 4th One Day International match between South Africa and India held at the Wanderers Cricket Ground in Johannesburg, South Africa on the 10th February 2018
Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

இது குறித்து பேசிய கிரண் மோர் “இந்திய அணியில் தோனியின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் அவரின் பங்கு நிச்சயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக அணியில் இடம்பெறும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தோனியின் அறிவுரைகள் எந்த அளவிற்கு கை கொடுக்கின்றன என்பது அவர்களே வெளிப்படையாக சொல்லி வருகின்றனர். அவர் பேட்டிங்கில் சரியாக விளையாடா விட்டாலும் அவரின் பங்கு இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. அவர் அணியில் இருப்பது கேப்டன் கோஹ்லிக்கு தான் கூடுதல் பலத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Mohamed:
whatsapp
line