கோஹ்லியா? ரோகித் சர்மாவா? யாரு ‘பெஸ்ட்’ – பதிலளித்து சண்டை மூட்டிவிடும் ஆஸ்திரேலிய வீரர்!
இந்திய அணியில் விராத்கோலி, ரோகித் சர்மா இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என பதிலளித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் பிராட் ஹாட்ஜ்.
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த மிக முக்கிய காரணங்களாக இருவரை எளிதில் குறிப்பிடலாம். முதலாவதாக, கேப்டன் விராட்கோஹ்லி. இவர் தொடர்ந்து 6 ஆண்டுகள், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தார். கடந்த ஆண்டும் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களுக்கும் மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
அடுத்ததாக, துவக்க வீரர் ரோஹித் சர்மா. மிடில் ஆர்டரில் ஆடிவந்த ரோஹித் சர்மா, துவக்க வீரராக மாற்றப்பட்டபிறகு, ஆட்டத்தின் போக்கே மாறியது. சதங்கள் மற்றும் இரட்டை சாதனைகளாக விளாசி பல சாதனைகள் புரிகிறார். இந்த ஆண்டு ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக உள்ளார். மேலும், ஐசிசி சிறந்த வீரருக்கான விருதையும் வென்றார்.
இவர்கள் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் இருந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இருவரில் யார் பெஸ்ட் என ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜ் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
விராட் கோலி சேஸிங் மாஸ்டர். இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்கிறபோதெல்லாம் அவரின் பேட்டிங் சிறப்பாக இருக்கும். வேறொரு கோணத்திற்க்கே செல்லும். அப்படிவொரு ஆக்ரோஷம். ஆனால் இவருக்கும் ரோஹித் சர்மா துவக்கத்தில் நிதானம். பிறகு சரவெடி போன்றவர். இருவருக்கும் அணியில் வேறு வேறு பணிகள் இருப்பதால் இருவரையும் ஒப்பிடமுடியாது. நிதானத்தில் துவங்கி ஆக்ரோஷமாக ஆட்டத்தைத் ஆடுவது ரோஹித்தின் வேலை. கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது விராட் கோலியின் வேலை’ எனக் கூறியுள்ளார்.
இருவரும் அவரவர்கள் எடுத்துக்கொள்ளும் வேலையில் சிறந்தவர்கள் என்றவாறு கூறினார்.